ஆசன வாய்ப் பகுதியில் சுருங்கி விரியும் தன்மையுள்ள ஸ்பிண்டர் என்ற தசையுள்ளது. மலம் கழிக்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் இது இறுக மூடியிருக்கும்.
மலம் கழிக்கையில் இது விரிவடையும்போது தான் இந்த பாதிப்புள்ளது என்பது நோயாளிக்குத் தெரியவரும், முதலில் வலி தோன்றி பொறுக்க முடியாத அளவுக்கு அதிகமாக படிப்படியாக குறையும். மீண்டும் ஒரு மணி நேரம் கழிந்த பின் மீண்டும் வலிக்கும். மலம் கழிக்கும் போது இரத்தக் கசிவும் இருக்கும்.
வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் வீக்கமும், புண்கள் போன்றவையும் அந்த இடத்தில் ஏற்படும். ஆசன வாயின் வெளிப்பக்கத்தில் ஒரு முடிச்சு போல வீங்கி் தெரிவதால் இதை மூலம் என்று மக்கள் தவறாக நினைத்துக் கொள்கிறார்கள்.
சில நேரங்களில் கிழிந்த இடத்தில் தோன்றிய புண் செப்டிக் ஆகி சீழ் வைத்து புரைப்புண்ணாக மாறும். அந்த இடத்தில் தொட்டாலோ, உள்ளாடைகள் பட்டாலோ வலிக்கும்.
இந்த வலிக்கு பயந்தே மலம் கழிப்பதை நோயாளி தவிர்க்கக்கூடிய சூழ்நிலைகள் நோன்றும். உட்காரும்போது வலி ஏற்படுவதால் உட்காரவும் முடியாத நிலைக்கு நோயாளி தள்ளப்படுவார்.
இருமினாலோ, வயிறு குலுக்க சிரித்தாலோகூட நோயால் வரும் வலி அதிகரிக்கும். சிலருக்கு சீழ்க்கட்டிகளால் காய்ச்சல்கூட வருவது உண்டு. பிஸ்ஸர் வந்த இடத்தில் அடிக்கடி குத்துவது போன்ற வலியும், நமைச்சலும் இருக்கும். இந்த இடத்தைச் சொறிந்தால் நோய் அதிகரிக்கும்.
ஆசனவாய் வெடிப்பின் சிகிச்சைகள் என்ன?
ஆண்களை விட பெண்களை அதிகமாக பாதிக்கும் இந்த நோயில், ஐம்பது விழுக்காட்டுக்கு மேல் எந்த சிகிச்சையும் தேவைப்படாமல் சரியாகிவிடும். சில ரேங்களில் மருந்து மாத்திரைகள் தேவைப்படலாம்.
மலமிளக்கிகளைத் தந்து மலம் கழிக்கும் போது வருகிற வலியைக் குறைத்தல், வலிநிவாரணிகளைக் பயன்படுத்துதல், மருத்துவர் ஆலோசனைப்படி களிம்புகளைப் பூசுதல், கிளிசரின் கொண்டு தசையை இலக்குதல் போன்றவற்றைப் பயன்படுத்தி இந்தப் பிரச்சனையை சரிப்படுத்தலாம்.
நாட்பட்ட நிலையில் இந்த பாதிப்பு தொடர்ந்தால் அறுவை சிகிச்சை தேவைப்படும். அறுவை சிகிச்சை செய்துகொண்ட நோயளிகளில் 90சதவீதம் வரை மீண்டும் இந்த பாதிப்பு வருவதில்லை.