முன்னுரை:-
இரவு நீண்ட நேரம் தூங்காமல் இருப்பவர்கள் எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள் என்று இந்த கட்டூரையில் பார்க்கலாம்.
விளக்கம்:-
தூக்கம் என்பது மிகவும் முக்கியமான விஷயம். தூக்கம் சரியாக இல்லையென்றால், அந்த நாட்கள் முழுவதும் சரியாகவே இருக்காது.
இந்நிலையில் லாக்டவுன் காரணமாக இரவு நீண்ட நேரம் தூங்காமல் இருப்பவகர்கள் அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும், தூங்காமல் இருப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பிரச்சனைகள் பின்வருமாறு:-
1. இதய நோய்
2. டைப் 2 நீரழிவு நோய்
இதய நோய்:-
இரவில் தூங்காமல் இருப்பதால், அதிகமான உணவுகளை சாப்பிடுகின்றனர். இது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதுமட்டுமின்றி, உடலில் கொழுப்பும் அதிகரிக்கும் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இதயநோயை உண்டாக்கும் என்றும் மருத்துவர்கள் கூறி அதிர வைக்கின்றனர்.
டைப் 2 நீரழிவு நோய்:-
இரவில் நீண்ட நேரம் தூங்காமல் இருப்பதால், அதிக அளவில் உண்கிறோம். இதனால், உடலில் குளுக்கோஸ் அளவு அதிகரித்து, நீரழிவு நோயை உண்டாக்குமாம். இந்த இரண்டு நோய்களும் மிகுந்த பாதிப்பை தரும் என்பதால், கவனத்துடன் செயல்படுவது அவசியம்.