உள் மூலம், வெளி மூலம் வித்தியாசம் என்ன..?

மூலக்கட்டிகள் ஆசன வாய்க்கு உள்ளே இருப்பதை வைத்து அதை உள்மூலம் என்றும், வெளியே இறங்கி வருவதை வெளிமூலம் என்றும் கூறுகிறார்கள்.

மூலநோயின் ஆரம்ப நிலையை உள் மூலம் எனலாம். மூலக்கட்டி தோன்றி வெளி வராமல் ஆசன வாயின் உட்பகுதியில் இருக்கும்.

உள்ளிருந்து அவ்வப்போது வெளியில் வந்து செல்லும் மூலத்தையும் உள்மூலம் எனலாம்.

மலக்குழாய் வளையங்களுக்கு சற்று கீழே சிவந்த நிறத்தில் அல்லது பழுப்பு நிறத்தில் மூலக்கட்டிகள் இருப்பது தெரியவரும்.

சில சமயம், மூலக்கட்டிகள் உள்ளே இல்லாமல் வெளிப்பக்கத்தில் மட்டும் தோன்றும்.

இதை வெளிமூலம் என்கிறோம். இந்த நிலையில் கட்டிகள் தோலால் மூடப்பட்டு இருக்கும். வெளிமூலம் நாட்பட்ட நிலையில் வருகிறது.

சில போலி மருத்துவர்கள் மூலக்கட்டிகளுக்கு முப்பது பெயர்கள் வரை வைத்திருப்பார்கள்.

அறிவியல் பூர்வமாக இவற்றை ஆராய்ந்து உள்ள ஆங்கில மருத்துவம், இவற்றை அதன் தோற்றம் மற்றும் அளவை வைத்து நான்காக பிரிக்கிறது. அவை முதல டிகிரி, இரண்டாவது டிகிரி, 3-வது டிகிரி, 4-வது டிகிரி ஆகும்..

மூலநோய்க்கு லேசர் சிகிச்சை முறை..!

ஆண்டுக் கணக்கில் இருக்கும் தொல்லையை பத்து நிமிடத்தில் முடித்து வைக்கிற ஒரு சிகிச்சையிருக்கிறது என்றால் அது லேசர் சிகிச்சை மட்டுமே.

இந்த சிகிச்சையின் போது எறும்பு கடிப்பது போல லேசான வலி மட்டுமே இருப்பதால் ஒரு சிகிச்சை நடைபெருகிறது என்ற உணர்வு பொதுவாக நோயளிக்குத் தோன்றுவது கிடையாது.

இதனால் தான் நோயாளி இந்த லேசர் சிகிச்சையை நாடுகிறார்.
லேசர் சிகிச்சை முறையில் செங்கதிர் லேசர் சிகிச்சை முறை என்ற ஒரு சிகிச்சை முறை இருக்கிறது. இதை ஐ.ஆர்.சி. ஔி ஊடுருவு கதிர் சிகிச்சை முறை என்கிறார்கள்.

இந்த முறையில் நவீன கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
நோயாளியைப் பரிசோதித்து,மூலத்தின் தன்மையைக் கண்டறிந்து, கட்டிமீது ஔிக் கற்றைகள் பாய்ச்சுவதுதான் செங்கதிர் லேசர் எனப்படும் இந்த சிகிச்சையாகும்.

இந்த லேசர் கருவி இன்ப்ரா ரெட் என்கிற செந்நிற கதிரை உற்பத்தி செய்கிறது. அக்கதிர்கள் மூல நோய்க்குச் செல்லும் இரத்தத்தை உடனே நிறுத்திவிடுவதால மூலக்கட்டி சுருங்கி விடுகிறது.

Recent Post

RELATED POST