காலையில குளிச்சிட்டு புது ஆடை உடுத்திகிட்டு, பட்டாசு வெடிச்சிட்டு வாய்க்கு ருசியா சாப்பிட்டோமா, அப்படியே டி.வி-ல போடும் நிகழ்ச்சியை பார்த்தோமா, அவ்வளவுதான் தீபாவளி” என்று பலர் நினைக்கலாம். ஆனால், அது சரியாக இருந்தாலும், நம் வாழ்க்கை வளர்ச்சிக்கு இது போதுமா? என்றால் நிச்சயம் தவறுதான். பண்டிகை என்றால் என்ன? நம் வாழ்வை வசந்தமாக மாற்ற வருவதுதான் பண்டிகை.
சாஸ்திர பரிகாரம் என்பது நம் முன்னோர்கள் கடைபிடித்து, அவர்கள் நல்ல நிலையில் இருந்ததால் அவர்களின் அடுத்த தலைமுறையினரையும் கடைபிடிக்க சொல்லிய ஒரு விதியாக, எழுதாத சட்டமாக சொல்லி வைத்து சென்றார்கள்.
ஒரு சமயம், சிவாலயத்தில் எரிந்துக்கொண்டு இருந்த தீபத்தின் எண்ணையை குடிக்க சென்றது ஒரு எலி. அப்போது தன்னை அறியாமல் அந்த தீபத்தின் திரியை தூண்டியதால், அந்த தீபம் பிரகாசமாக எரிந்தது.
இதனால் அந்த எலியின் வாழ்க்கை மறுபிறவில் மகாபலிசக்கரவர்த்தியாக பிரகாசமான வாழ்க்கை அமைந்தது. சாஸ்திரம் நமக்கு நன்மைதான் சொல்லுமே தவிர பாதகம் சொல்லாது. சரி, எது எப்படியோ நமக்கு நன்மை நடக்க வேண்டும் என்றால் நம் முன்னோர்கள் கடைபிடித்த சாஸ்திர பரிகாரங்களை கடைபிடிப்பது தவறில்லை.
அதுவும் தீபாவளி அன்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்த சாஸ்திர பரிகாரங்களை கடைபிடித்தால் நம்மை வாட்டி வதைக்கும் தரித்திரங்கள் விலகி, வாழ்க்கையே ஏறுமுகமாக இருக்கும் என்பது நிச்சயம்.
தரிதிரத்தை நீக்கும் குளியல்
தரிதிரத்தை நீக்கும் குளியல் நம்மை வாட்டி வதைக்கும் தரித்திரங்கள் தீர, தீபாவளி அன்று முதலில், சூரிய உதயத்திற்கு முன்னர், எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
குளிக்க வென்னீர்தான் பயன்படுத்த வேணடும். இத்துடன் அந்த குளிக்கும் வாளியில் மஞ்சள், சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும். எதனால் என்றால், தீபாவளி தினத்தில் கங்கை அம்மன் தூய்மையான தீர்த்தங்களில் தோன்றுகிறாள்.
இதனால் கங்கையை நாம் நம் இல்லத்தில் இருந்தபடியே பூஜிப்பதாகாவும் ஐதீகம். இதன் பயனாக தூய்மையான தண்ணீருக்கு தெய்வீக சக்தி கிடைக்கிறது.
ஏன் சூரிய உதயத்திற்கு முன் குளிக்க வேண்டும்?
உடலில் இருக்கும் தோஷங்கள் நீங்குகிறது. விடிவதற்குள் குளித்து விட வேண்டும் என்பதற்கு காரணம் என்னவென்றால், சூரிய உதயத்திற்கு பின்னர் அமாவாசையின் சக்தி அதிகரிக்கும். அந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளித்தால், பித்ருக்களின் சாபத்திற்கு ஆளாவோம். இதனால் ஸ்ரீமகாலஷ்மியும், திருமாலும் நம்மேல் கருணை காட்ட மாட்டார்கள் என்பதை நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும். அதுபோல, நண்லெண்ணையை கண்டிப்பாக தலையில் தேய்த்து குளிக்க வேண்டும். இதனால் சனிஸ்வர பகவானின் பிடியில் இருந்தும் தப்பிப்போம். தரித்திரமும் நீங்கும்.
பட்டாசு ஏன் வெடிக்க வேண்டும்?
துஷ்ட சக்தியை விரட்டும் பட்டாசினை வெடிப்பதால் துஷ்டசக்திகள் விலகும். அதனால்தான் கேரள நாட்டில் சில ஆலயங்களில் வெடி வெடிப்பார்கள். இதனால் துஷ்ட சக்திகள் விலகும். வெடி சத்தத்தை கேட்டு மிருகங்கள் பயந்து ஓடுவதுபோல, துஷ்ட சக்திகளும் ஒடி விடும்.
புத்தாடையில் எதற்கு மஞ்சள் வைக்க வேண்டும்?
தோஷத்தை நீக்கும் மஞ்சள் புது உடை உடுத்தும்போது கண்டிப்பாக மிகச் சிறிய அளவில் மஞ்சள் வைத்த பிறகே அந்த புத்தாடையை உடுத்த வேண்டும். இதனால் தோஷங்கள் நீங்கும். வாழ்வை வெளிச்சமாக்கும் தீப ஒளி. தீப திருநாள் அன்று இல்லத்தில் விளக்கு ஏற்ற வேண்டும். நம் வீட்டு பூஜை அறையில் 5, 9 என்ற எண்ணிக்கையில் விளக்கு ஏற்ற வேண்டும். இதனால் தெய்வங்கள் மகிழ்ச்சியடையும்.
ஸ்ரீஇராமர், வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பிய தினம், ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்ச சதுர்த்தி திதி. இந்த நாளை, “தீயாஸ்” என்று சொல்லி அகல் விளக்கு ஏற்றி கொண்டாடினார்கள். யமுனைக்கு சீர் கொணடு வரும் யமதர்மராஜன் அயோத்தி மக்கள், இத்திருநாளை தீபாவளி என்றும் சொல்கிறார்கள். ஸ்ரீஇராமர் அயோத்திக்கு வந்த பிறகுதான் அயோத்தியே வெளிச்சத்தில் ஜொலித்தது.
வெற்றியின் சின்னம் ஜொலிக்கும் தீப ஒளி. அந்த தீப ஒளி, நம் இல்லத்திலும் ஜொலித்தால், காரிய தடை என்கிற இருள் நீங்கி, நம் வாழ்க்கையில் முன்னேற்றம் என்கிற வெளிச்சத்தை தந்திடும். அதேபோல, மாலையில் வாசலில் இரண்டு தீபம் ஏற்ற வேண்டும். தீபாவளி அன்று, யமதர்மராஜன் தன் சகோதரியான யமுனைக்கு சீர் கொண்டு வருவார்.
அதனால் அன்று மாலை நம் இல்லத்தில் நிறைய தீபம் ஏற்றினால், தமது பூலோக வருகையை மக்கள் மகிழ்சியோடு வரவேற்கிறார்கள், அதனால் அந்த இல்லத்தில் இருக்கும் பெண்களையும் தனது சகோதரிகள் போலவே எனறெண்ணி, அந்த குடும்பத்திற்கு ஆபத்து வராமல் பார்த்துக் கொள்வார். அந்த ஆண்டு முழுவதும் துஷ்ட சம்பவங்கள் அந்த இல்லத்தில் ஏற்படாது.