ரத்த தானம் கொடுத்த பிறகு இதையெல்லாம் செய்யக்கூடாது.

ரத்த தானம் என்பது ஒரு உயிரை காப்பாற்றுவதற்கு சாதாரண மனிதனால் முடிந்த கடைசிபட்ச உதவி ஆகும். ரத்த தானம் கொடுத்தவர்கள், அதனை செய்வதற்கு முன்பும், அதனை செய்த பிறகும் சில விஷயங்களை செய்யக்கூடாது..? அந்த விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

என்னென்ன செய்யக்கூடாது?

ஹீமோகுளோபின் அளவு என்பது ரத்தத்தில் போதுமான அளவு இருக்க வேண்டும். இது தான் உடலில் உள்ள திசுக்களுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்கிறது. இதன் அளவு குறைவாக இருக்கும் பட்சத்தில், ரத்தம் கொடுப்பதற்கு அனுமதிக்க மாட்டார்கள். எனவே, ரத்தம் கொடுப்பதற்கு முன்பு, சத்தான உணவுகளை சாப்பிட்டுவிட்டு, ரத்தம் கொடுக்க செல்லுங்கள். சத்தான உணவை சாப்பிட்டுவிட்டு, ரத்தம் கொடுக்க சென்றால், ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். மேலும், ரத்தம் கொடுத்த பிறகும், சத்தான உணவுகளை சாப்பிடுங்கள். இவ்வாறு சத்தான உணவுப் பொருளை சாப்பிட்டால், சோர்வு ஏற்படுவதும் தடுக்கப்படும். மேலும், தலைச்சுற்றல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதையும், ரத்ததானம், வைட்டமின்கள், இரும்பு சத்து போன்றவை இழப்பதையும் ஈடு செய்ய முடியும்.

ரத்த தானம் செய்வதாக இருந்தால், கொழுப்பு குறைவாக உள்ள உணவுப் பொருட்களை சாப்பிடுவது சிறந்தது. காரணம் என்னவென்றால், கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டால், அது ரத்த பரிசோதனை செய்வதற்கு சில இடையூறுகளை ஏற்படுத்திவிடும். எனவே, ரத்த தானம் செய்வதாக இருந்தால், குறைந்த அளவு கொழுப்புள்ள உணவுகளையே சாப்பிடுங்கள். அதாவது, பழ வகைகள், நட்ஸ் வகைகளை சாப்பிட்டு வாருங்கள்.

ரத்த தானம் செய்யும் போது, உடலில் இருக்கும் இரும்பு சத்துக்கள் சற்று குறையும். எனவே, அதனை ஈடுகட்டுவதற்காக, வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இதன்மூலம், மற்ற உணவுகளில் உள்ள இரும்பு சத்துக்களை உறிஞ்சி, தனியாக எடுக்க முடியும். திராட்சை, எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களில் இந்த சத்து அதிகமாக உள்ளது.

உடலில் உள்ள திசுக்களுக்கு தேவையான ஆக்ஸிஜனை கொண்டு செல்வதற்கு இரும்புச்சத்தும் இன்றியமையாதது. உடலில் இரும்பு சத்து குறைந்தால் ஆரோக்கியமான ரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்வதில் சிக்கல் நேரும். உடல் இயக்க செயல்பாடுகளை தக்கவைப்பதற்கு புதிய ரத்த அணுக்களை உடல் உருவாக்கிக்கொண்டே இருக்கவேண்டும். இரும்புச்சத்து அதிகம் கொண்ட உணவுகளை உட்கொள்வது போதுமான இரும்பு சத்தை தக்கவைத்துக்கொள்ளவும், ரத்த அணுக்களின் எண்ணிக்கையை சீராக பராமரிக்கவும் உதவும். கீரை, மீன், சிவப்பு இறைச்சி, கோழி, திராட்சை, பீன்ஸ், வேர்க்கடலை, வெண்ணெய், நட்ஸ் வகைகள் போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

புதிய ரத்த அணுக்களை உற்பத்தி செய்வதற்கு போலிக் அமிலம் அவசியமானது. இது ரத்ததானம் செய்யும்போது இழக்கும் ரத்த அணுக்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு உதவும். கீரை, காலே உள்ளிட்ட பச்சை இலை காய்கறிகள், ஆரஞ்சு சாறு, தானியங்கள், அரிசி போன்றவற்றிலும் போலிக் அமிலம் உள்ளடங்கி இருக்கிறது.

இந்த ஐந்து விஷயங்கள் மட்டுமின்றி, மது, புகை அருந்தாமல் இருத்தல், கீரை, மீன், கொண்டக்கடலை போன்ற உணவுகளை சாப்பிடுதலும், ரத்தம் கொடுக்கக்கூடியவர்கள் மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

Recent Post

RELATED POST