மனிதனின் உள்ள நலத்தை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி முகம், அது போல ஒரு மனிதனின் உடல் நலத்தை பிரதிபலிக்கும் மற்றொரு கண்ணாடி தான் மனிதனின் விரல்களில் இருக்கும் நகங்கள்.
இந்த நகங்களில் நிறம் மற்றும் வடிவத்தை கொண்டே ஒரு மனிதனின் உடல் நலத்தினை பற்றி கூறலாம், உங்கள் நகங்கள் தடித்து காணப்பட்டால் அது மனிதனின் நுரையீரலில் நோய் இருப்பதற்கான அறிகுறியாகும். அது நுரையீரல் புற்றுநோயக கூட இருக்கலாம்.
மனிதனுக்கு பிறவியிலே இதய சம்மந்தமான நோய் இருந்தாலோ அல்லது ரத்த ஓட்டம் குறைவாக இருந்தாலோ தோலின் நிறம் நீலம் கலந்து காணப்படும். இது நகங்களில் பிரதிபலிக்கும்.
பிறைபோன்ற வளைந்த நடுவில் நகம் இருந்தால் அந்த மனிதனுக்கு இரும்பு சத்து குறைவாக உள்ளது என்று அர்த்தம்.
நகங்கள் உலர்ந்து விரிசல் விட்டு காணப்பட்டால் அதற்கு இரும்பு மற்றும் ஜிங்க் தாது குறைபாடுமே காரணம், நாம் நம் தலை மற்றும் பிற உடல் பகுதிகளை பராமரிப்பது போலவே நகங்களையும் பாதுகாக்க வேண்டும். குறிப்பாக ஈரப்பசை நம் நகங்களுக்கு மிகவும் முக்கியம்.
நகச்சுற்று என்பது நகத்தின் மடிப்பிற்கும் பக்கவாட்டு பகுதிக்கும் இடையில் ஏற்படும் ஒரு நோய். இதற்கு முக்கிய காரணமாக காணப்படுவது நாம் நகங்களை கடிப்பதே. இவ்வாறு நாம் செய்வதால் நகத்தின் மேல்தோல் பாதிக்கப்பட்டு, பாக்டீரியா தோற்று ஏற்படுகிறது.
மஞ்சள் நிற கால் விரல்கள் மனிதனுக்கு வயதாவதை உணர்த்துகின்றது. கால் நகங்கள் தடிப்பதும் முதுமையின் அறிகுறியே.