ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கோதுமையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Wheat Health Benefits in Tamil : தானிய வகைகளில் ஒன்றான கோதுமை பஞ்சாபிகளின் முதன்மை உணவாக இருந்து வருகிறது. கோதுமை மாவில் சப்பாத்தி, பூரி, அல்வா எனப் பல வகையான உணவுகளை செய்து சாப்பிட்டிருப்போம். கோதுமையில் எண்ணற்ற மருத்துவ பயன்கள் உள்ளன. அதனை பற்றி தெரிந்து கொள்வோம்.

கோதுமையில் உள்ள அதிக அளவு நார்ச் சத்து இருப்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கோதுமை மாவில் செய்யப்பட்ட சப்பாத்தியை உணவில் அடிக்கடி சேர்த்துவரலாம். சப்பாத்தியாக மட்டுமல்லாமல், கோதுமையில் கஞ்சி, கோதுமையில் உப்புமா, கோதுமையில் தோசை என தயார் செய்து சாப்பிடலாம்.

கோதுமையை தினமும் உணவில் சேர்த்து வந்தால் இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்தமாகும்.

இதய நோய் உள்ளவர்கள், கோதுமையை உணவில் சேர்த்து வந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

கோதுமையில் உள்ள சில வைட்டமின்கள் வாய் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தும். எனவே வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் கோதுமையை உணவில் அதிகம் சேர்த்து வரலாம்.

கோதுமையில் உள்ள நார்ச்சத்து செரிமான கோளாறுகளை நீக்கி மலச்சிக்கலில் இருந்து விடுதலைத் தரும்.

உங்களுக்கு அடிக்கடி புளித்த ஏப்பம் வருகிறது என்றால் கோதுமையை ரவை போல அரைத்து கஞ்சி செய்து குடித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

கோதுமையில் உள்ள வைட்டமின் ஈ, செலினியம் மற்றும் நார்ச்சத்து புற்றுநோயைத் தடுக்கும்.

மைதா மாவை தவிர்த்து விட்டு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கோதுமையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் பல நோய்களை வரவிடாமல் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்.

Recent Post

RELATED POST