துளசி செடியை எந்த திசையில் வைத்தால் பண வரவு கிடைக்கும்?

செடிகள் வைத்திருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் இந்த துளசிச் செடியும் நிச்சயம் வளர்க்கப்படுகிறது. அவ்வாறு செடிகள் எதுவுமே வளர்க்காமல் இருந்தாலும் கூட துளசி செடியை மட்டுமாவது வீட்டில் வைத்து பூஜித்து வருவது நல்லது.

இந்து மதத்தில் துளசி செடி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வீட்டில் உள்ள பெண்கள் காலையில் எழுந்தவுடன் துளசி செடியை வழிபட்டால் நம் வீட்டில் எப்போதும் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும் என்பது நம்பிக்கை.

துளசி செடியை எப்போதுமே வீட்டின் வடக்கு திசையில் தான் வைக்க வேண்டுமாம். ஏனென்றால் லட்சுமி தேவி வடக்கு திசையில் இருப்பதால் வீட்டில் செல்வம் பெருகும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த திசையில் வைக்கப்படும் செடியை வாடாமல் பார்த்து கொள்ள வேண்டும். இதனால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும்.

Recent Post