வெள்ளை முடி கருப்பாக வேண்டுமா? இதை ட்ரை பண்ணுங்க..

இளம் வயதில் பலருக்கு வெள்ளை முடி வர ஆரம்பிக்கும். அதற்கு காரணம் முடியின வேர் பகுதியில் உள்ள மெலனின் என்னும் நிறமிப்பொருள் முடியின் நீளத்திற்கு உற்பத்தி செய்ய முடியாததால் முடியின் நிறம் மாறும்.

வெள்ளை முடி கருப்பாக இயற்கை வைத்தியம்

தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாற்றினை கலந்து, தினமும் தலைக்கு தடவி வர வேண்டும். இதனால் உங்கள் தலை முடி கருமையாவதோடு, முடி தொடர்பான பிரச்சனைகளும் நீங்கும்.

நெல்லிக்காய் பொடியுடன், எலுமிச்சை சாற்றினை கலந்து ஸ்கால்ப்பில் படும்படி தடவி மசாஜ் செய்ய வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கேரட் ஜூஸை தினமும் குடித்து வருவதன் மூலம் வெள்ளை முடியைத் தடுக்கலாம். மேலும் கேரட் ஜூஸ் முடியை ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் வைத்துக் கொள்ளும்.

வெங்காயம் முடி உதிர்வதைத் தடுப்பதுமட்டுமின்றி, வெள்ளை முடியையையும் போக்கும். வாரம் ஒருமுறை வெங்காயத்தை அரைத்து, அதனை ஸ்கால்ப்பில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பிறகு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

Recent Post

RELATED POST