உடல் எடையை குறைக்க விரும்பும் பலரும் அரிசி உணவுகளை தவிர்ப்பார்கள். அரிசி உணவுகளை தவிர்ப்பதால் மட்டும் எடையை குறைக்க முடியாது. தினசரி உடற்பயிற்சி, சீரான தூக்கம், சரியான உணவு முறை இவைகளால் மட்டுமே உடல் எடையை சரியாக பராமரிக்க முடியும்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வேக வைத்த அரிசி சாதம் ஒரு பங்கும், காய்கறி, கீரைகள், பருப்பு போன்றவற்றை சேர்த்து இரண்டு பங்கும் சாப்பிடலாம்.
அரிசியை குக்கரில் வேகவைத்து சாப்பிடுவதை விட வடித்து சாப்பிடும் முறையை பின்பற்றலாம். இதன் மூலம் உடல் எடையை அதிகரிக்க செய்யும் மாவுச்சத்தை குறைக்க முடியும். 1 கப் வேக வைத்த வெள்ளை அரிசியில் 242 கலோரிகள், 4.4 கிராம் புரதம், 0.4 கிராம் கொழுப்புச்சத்து, 53.4 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 0.6 கிராம் நார்ச்சத்து உள்ளது. மேலும் வைட்டமின் பி, கார்போ ஹைட்ரேட், போலேட், தயமின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
சோடியம், கொழுப்பு போன்றவை அரிசியில் மிகவும் குறைவாக இருப்பதால் உடலில் சேரும் கெட்டக்கொழுப்பை கரைக்கிறது. எனவே உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு அரிசி சிறந்த உணவாகும்.