கொஞ்சம், கொஞ்சமாக உயிருக்கு உலை வைக்கும் வெள்ளை சர்க்கரை

கியூபாவில் அதிகம் விளைவிக்கப்படும் கரும்புகாலப்போக்கில் உலகம் முழுவதும் பயிரிடப் பட்டு, அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இதில் காணப்படும் அதிகப்படியான இனிப்பு சுவையால் ஈர்க்கப்பட்ட பெரும்பாலான விவசாயிகள் இதை அதிகப்படியாக பயிரிட்டனர்.

இந்த கரும்பிலிருந்து இதன் சாறு மட்டும் தனியாக பிரித்தெடுக்கப்பட்டு நாட்டு சர்க்கரைகள் தயாரிக்கப்பட்டன. ஆனால், இதன் நிறம் கருமையாக இருந்தது. தொழில்நுட்ப வளர்ச்சியாலும், அறிவியல் முன்னேற்றத்தாலும், கரும்பிலிருந்து கிடைக்கும் சாற்றை சில வேதிப் பொருட்களை பயன்படுத்தி வெள்ளையாக்கினர். அதுவே காலப்போக்கில் ஜீனி எனப்படும் வெள்ளை சர்க்கரையானது.

கருப்பு நிறமுள்ள கரும்புசாறில் கால்சியம் கார்பனேட்டை கலப்பதாலேயே வெண்மையாகிறது. இது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பதாகும். ஆனாலும், நிற கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு அதிகப்படியானோர் இதையே இனிப்பிற்காக பயன்படுத்துகிறார்கள்.

இதனாலேயே ஜீனி எனப்படும் வெள்ளை சர்க்கரை அசைவத்தை சார்ந்தது என கூறும் ஒருசாரார் இருக்கத்தான் செய்கிறார்கள். சைவமோ? அசைவமோ? இது முக்கியமல்ல. கொஞ்சம், கொஞ்சமாக உயிருக்கு உலை வைக்கும் வெள்ளை சர்க்கரையை உதறி தள்ளிவிட்டு, நாட்டு சர்க்கரைக்கு மாறுவதுதான் நல்லது.

Recent Post

RELATED POST