யார் யார் ஆப்பாயில் சாப்பிடலாம்..! முழு தகவல் இதோ..!

முன்னுரை:-

ஆப்பாயில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதையும், அதில் உள்ள சத்துகள் பற்றியும், அதனை யார் யார் சாப்பிடலாம் என்பது பற்றியும் தற்போது பார்க்கலாம்.

விளக்கம்:-

உலகத்தில் உள்ள பலருக்கு பிடித்தமான உணவு வகைகளில் ஒன்று முட்டை. சைவ பிரியர்கள் கூட விரும்பி உண்ணும் இந்த முட்டையை, எப்படி சமைத்தாலும் அது சுவையாக தான் இருக்கும். இதைப் பற்றி வர்ணிக்கும்போது, நிறைய பேருக்கு முட்டை சாப்பிடும் வந்திருந்தாலும் வந்திருக்கும். அப்படிப்பட்ட முட்டையில் பல்வேறு ஊட்டச் சத்துகள் நிறைந்தள்ளன.

முட்டையில் இருக்கும் சத்துகள்:-

அமினோ ஆசிட், செலினியம், வைட்டமின் டி, வைட்டமின் பி6, வைட்டமின் பி12, மினரல் சத்துகள், அயர்ன், காப்பர் உள்ளிட்ட பல்வேறு சத்துகளை முட்டை கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி, ஒமேகா பேட்டி ஆசிட் 3 நிறைந்திருப்பதால், இதயத்திற்கு மிகவும் நல்லது.

இவ்வளவு சத்துகள் நிறைந்திருந்தாலும், இந்த முட்டையை, ஆப்பாயில் முறையில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே சாப்பிட வேண்டும். இல்லையென்றால், சில உடல்நலக்கேடுகள் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

யார் யார் ஆப்பாயில் சாப்பிடலாம்:-

1. எந்தவித உடல் பாதிப்புகளும் இல்லாதவர்கள் தான் அதிக அளவில் ஆப்பாயில் சாப்பிட வேண்டும்.

2. இதய பிரச்சனைகள் உள்ளவர்கள், உடல் பருமன் அதிகமாக உள்ளவர்கள், சுகர் நோயாளிகள் போன்றோர்கள் ஆப்பாயிலை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

3. அதுமட்டுமின்றி, உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், உடல் எடையை சீராக வைத்திருக்க நினைப்பவர்கள் ஆப்பாயில் முட்டையை தவிர்க்க வேண்டும்.

4. தீவிர மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள், வாயு பிரச்சனை இருப்பவர்கள், அதிகப்படியான மாத்திரிகைகள் சாப்பிடுபவர்கள் முட்டையை தவிர்த்தல் நல்லது.

5. உடல் எடையை கூட்ட நினைப்பவர்களுக்கு ஆப்பாயில் சிறந்த உணவு ஆகும்.

Recent Post

RELATED POST