பாதம் பருப்பு யார் சாப்பிடலாம்..? யார் சாப்பிடக்கூடாது..!

பாதாம் பருப்பில் உள்ள சத்துகள் என்ன என்பதை பற்றியும், அந்த சத்துக்கள் உடலில் என்ன மாதிரியான நல்ல விஷயங்களை கொண்டு வரும் என்பதை பற்றியும், யார் யார் பாதாம் சாப்பிடலாம் என்பதை பற்றியும் இந்த சிறப்புத் தொகுப்பில் காணலாம்.

ஊட்டசத்துகளை அதிகம் வைத்திருக்கும் ஒரு சில பொருட்களில் ஒன்று பாதாம். என்ன தான் ஊட்டச்சத்துகளை வைத்திருந்தாலும், இந்த பாதாமும் ஒரு சிலருக்கு ஏற்புடையதல்ல. முதலில் இந்த உணவுப்பொருளில் உள்ள சத்துக்களை பார்க்கலாம்.

நன்மைகள்:

நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின் இ என பல்வேறு ஊட்டசத்துகள் பாதாமில் நிறைந்து காணப்படுகிறது.

பாதாதம் சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் குறையும். புற்றுநோய்க்கு எதிரான கிருமிகளோடு போராடும்.

தினமும் 5 பாதாம் சாப்பிடுவதால் ரத்தத்தில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும்.

தினமும் இரவில் பாதாம் எண்ணெய் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து வந்தால், சருமம் ஆரோக்கியமாகவும், பொலிவுடனும் இருக்கும்.

பாதாம் பருப்புகளை தொடர்ந்து உண்டு வருபவர்களுக்கு தலைமுடி உதிர்தல் பிரச்சனை சரியாகும். மேலும் தலை முடி நரைத்தல் போன்ற பிரச்சனையும் சரி செய்யும்.

கருவுற்றிருக்கும் பெண்கள் பாதாம் பருப்புகளை சரியான அளவில் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் வளரும் கருவிற்கும் நன்மையை அளிக்கும்.

ஊறவைத்த பாதாம்பருப்பில் லிபேஸ் என்கிற நொதி உருவாகிறது. இதனை சாப்பிடும் போது , நாம் சாப்பிட்ட மற்ற உணவுகள் எளிதில் ஜீரணமாகும்.

யார் யார் சாப்பிடக்கூடாது:-

1. ஆண்டி பயாடிக் மாத்திரைகள் பயன்படுத்தும் நபர்கள், பாதாம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

2. பாதாமை அதிகமாக சாப்பிட்டால், இரப்பைக் குடல் பிரச்னைகள் வரும் அபாயம் இருக்கிறது.

3. நிறைய மாத்திரைகள் சாப்பிடுபவர்கள், பாதாமை தவிர்க்க வேண்டும். பாதாமும், மாத்திரைகளும், ஒன்றோடு ஒன்று கலந்து, உடலுக்கு கேடு ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது.

4. நட்ஸ் அலர்ஜி கொண்டவர்களும், நட்ஸ் சாப்பிட்ட பிறகு மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பவர்கள் பாதாமை தவிர்ப்பது நல்லது. இது சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Recent Post

RELATED POST