முருங்கைக்காய் நல்லதுதான்…ஆனால் இந்த பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது..!!

முருங்கைக்காயில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி போன்றவை போதிய அளவில் உள்ளன. 100 கிராம் முருங்கையில் 26 கலோரி இருக்கிறது.
முருங்கைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் நோய்கிருமிகள் நெருங்காது. உடல் உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
முருங்கைக்காய் உடலுக்கு நன்மை செய்தாலும் சில சமயங்களில் அதனை சாப்பிட கூடாது.

எப்போது முருங்கைகாய் சாப்பிடக்கூடாது?

ஒருவர் அடிக்கடி வயிறு தொடர்பான நோய்களால் அவதிப்பட்டாலோ அல்லது செரிமானப் பிரச்சனைகள் இருந்தாலோ, அவர்கள் முருங்கைக்காய் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். 

தாய்ப்பால் கொடுக்கும் போது முருங்கைக்காய் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. ஆனால், இந்தக் கூற்றை உறுதியான முறையில் சரிசெய்வதற்கு இதுவரை போதுமான ஆய்வுகள் இல்லை. 

முருங்கைக்காயில் நார்ச்சத்து அளவு அதிகம் உள்ளது. அதிகளவு நார்ச்சத்து உடலில் சேரும்போது வயிற்றுப்போக்கு, மலசிக்கல், குடல் பிரச்சினைகள், வாயுக்கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்க மாத்திரை சாப்பிடுபவர்கள் முருங்கைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது.

முருங்கைக்காயில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும் இருந்தாலும் அவை கர்ப்பிணிகளுக்கு சிலசமயம் அலர்ஜிகளை ஏற்படுத்தும்.

Recent Post

RELATED POST