உலர் திராட்சை யாரெல்லாம் சாப்பிட கூடாது?

திராட்சைப் பழங்களை விட உலர் திராட்சையில் அதிகமான சத்துக்களும் பலன்களும் உள்ளது. உலர் திராட்சையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் செரிமான பிரச்சனைகளை தீர்க்கும்.

உலர் திராட்சையில் வைட்டமின் பி, சுண்ணாம்பு சத்து, சுக்ரோஸ், ப்ரக்டோஸ், அமினோ அமிலங்கள், பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு சத்து ஆகியவை நிறைந்துள்ளது.

நீரிழிவு பிரச்சனை

உலர் திராட்சையில் இயற்கையாகவே சர்க்கரை அதிகமாக இருக்கிறது. எனவே நீரிழிவு பிரச்சனை இருப்பவர்கள் இந்த உலர் திராட்சையை மிகக் குறைவான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உடல் எடை அதிகரிக்கும்

உலர் திராட்சை பழங்கள் கலோரிகள் அதிகம் கொண்ட உணவாகும். இதை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளும் போது உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. ஏற்கனவே உடல் எடை அதிகம் உள்ளவர்கள் உலர் திராட்சையை குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

சிறுநீரக பிரச்சனை

சிறுநீரக பிரச்சனை, கல்லடைப்பு போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களும் உலர் திராட்சையை தவிர்ப்பது நல்லது.

குடல் பிரச்சனை

உலர் திராட்சையில் அதிகளவு நார்சத்து உள்ளதால் அது குடல் சார்ந்த பிரச்சனையை அதிகப்படுத்திவிடும். எனவே குடல் சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் உலர் திராட்சையை தவிர்ப்பது நல்லது.

Recent Post