இந்த பிரச்சனை உள்ளவர்கள் இட்லி சாப்பிடவே கூடாது..!!

இட்லி என்பது அனைவராலும் விரும்பப்படும் ஒரு உணவாகும். சாலையோர உணவகங்கள் முதல் பிரபல ஹோட்டல்கள் வரை, இட்லி எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும்.

இட்லியில் மற்ற கார்போ உணவுகளைக் காட்டிலும் கலோரிகள் மிதமான அளவில் இருக்கின்றன. எனவே, எடையை குறைக்க விரும்பும் நபர்கள் இதனை தங்களின் உணவுப் பட்டியலில் சேர்க்கலாம்.

யாரெல்லாம் இட்லி சாப்பிடக்கூடாது?

நீரிழிவு நோயாளிகள் இட்லியை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இட்லி புளித்த உணவாக இருப்பதால், அசிடிட்டி, நெஞ்செரிச்சல் மற்றும் குடல் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் இட்லியை அதிகமாக சாப்பிடக் கூடாது.

Also Read : தோசை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

இட்லி சாப்பிடுவதால் செரிமான கோளாறுகள் ஏற்படுவதில்லை. ஆனால், ஏற்கனவே செரிமான கோளாறு உள்ளவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்.

மூட்டுவலி, ஆர்த்தரைடிஸ் போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் அதிகமாக அரிசி உணவுகளை எடுத்தால், மூட்டுவலியின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

உளுந்து உள்ளிட்ட பருப்புகள் மூலம் அழற்சி ஏற்படும் நோயாளிகள் இட்லியை குறைக்க அல்லது தவிர்க்க பரிந்துரை செய்யப்படுகிறது.

தினசரி உணவில் இட்லியைச் சேர்ப்பதற்கு முன், உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

Recent Post

RELATED POST