கிராமங்களிலும் நகரங்களிலும் பழைய வீடுகளில் கிணறுகளை இன்றும் காணலாம். இந்தக் கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது? என்று நீங்கள் யோசித்தது உண்டா? அதற்கான காரணத்தை தெரிந்துகொள்ளுங்கள்
வட்டக் கிணற்றில் மூலைகள் இல்லாததால் அது கிணற்றைச் சுற்றியுள்ள நீரின் அழுத்தத்தை சமமாக வைத்திருக்கும். கிணறு வட்டமாக இல்லாமல் சதுரமாக இருந்தால், நான்கு மூலைகளிலும் தண்ணீர் அழுத்தம் அதிகமாக இருக்கும். இதனால் கிணறு நீண்ட காலத்திற்கு நீடிக்காது. அதனால்தான் கிணறுகள் வட்ட வடிவில் இருக்கிறது.
கிணறு வட்டமாக இருப்பதற்கு மற்றொரு காரணம் என்னவென்றால் சதுர அல்லது முக்கோண கிணற்றை விட வட்டமான கிணற்றை வடிவமைப்பது மிகவும் எளிதானது. வட்டக் கிணற்றில் தண்ணீர் சீரான அழுத்தத்துடன் இருப்பதால், மண் சரிவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு.