வைரஸ் பரப்புவதே வெளவால் தான்.. ஆனால் அவைகளுக்கு ஏன் பாதிப்பில்லை.. ஆச்சரிய தகவல்..

நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு சொல் என்றால் அது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் மட்டுமின்றி, முந்தைய காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட சார்ஸ், மார்ஸ் உள்ளிட்ட கொடிய வைரஸ்களும், வெளவால்களிடம் இருந்து தான் மனிதனுக்கு பரவியுள்ளது.

நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மனிதர்களுக்கு பரவும் இந்த வைரஸ், வெளவால்களுக்கு மட்டும் ஏன் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. இதுதொடர்பான பாதிலை தேடியபோது தான், பல்வேறு சுவாரசிய தகவல்கள் நமக்கு கிடைத்தது.

நோய் உடலை தாக்கும்போது, அதிலிருந்து நம்மை பாதுகாப்பது நோய் எதிர்ப்பு சக்தி தான். உடலில் நோய் நுழையும்போது, மூளை சிக்னல் கொடுக்கும். இதையடுத்து, நோய் எதிர்ப்பு சக்தி எனும் சோல்ஜர்கள், கிருமிகளிடம் சண்டை போட்டு நம்மை காப்பாற்றுவார்கள்.

நோய் கிருமிகள் இல்லாதபோது, அந்த சோல்ஜர்கள், உடலில் ஏதோ ஒரு மூலையில் தூங்கிக்கொண்டிருப்பார்கள். ஆனால், வெளவால்களில், எப்போதுமே ஓய்வெடுக்காமல், அந்த சோல்ஜர்கள் பணியில் இருப்பார்கள், நோய் சிறியதளவு உள்ளே நுழைந்தாலும் அதனை உடனே வெளியே விரட்டியடிப்பார்கள் அல்லது அதனை உள்ளேயே செயலிழக்க செய்வார்கள்.

இதேபோல் மனிதர்களுக்கும் அந்த சோல்ஜர்கள், தூங்காமல் எப்போதும் முழித்துக்கொண்டிருந்தால் கிருமிகளை அழிப்பதோடு சேர்த்து, உடலில் உள்ள மற்ற நல்ல செல்களும் அழிய வாய்ப்பு இருக்கிறது. இதனால் தான் கடவுள் அந்த வசதியை மனிதர்களுக்கு அளிக்கவில்லை.

இப்போது வாசகர்களாகிய உங்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம். வெளவால்களுக்கு மட்டும் அந்த சோல்ஜர்கள் எப்படி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் இருக்கிறார்கள் என்று.

அதற்கான பதில் என்னவென்றால், நோய் எதிர்ப்பு சக்தி சோல்ஜர்கள் கிருமிகளை அழித்துக்கொண்டிருக்கும் வேளையில், அவைகளின் உடலில் கெமிக்கல் ரியாக்சன் ஒன்று நடந்து, அதன்மூலம் வெளிவரும் ஒருவிதமான பொருள், நல்ல செல்களை மட்டும் பாதுகாத்துக்கொள்கிறது.

இதனால், நல்ல செல்கள், பாதுகாக்கப்பட்டு, கிருமிகள் மட்டும் இறக்கின்றன. இதனால் தான், மிகச்சிறிய அளவில் இருக்கும் இந்த வெளவால்களும், 40 ஆண்டுகள் உயிர்வாழும் திறமையை கொண்டிருக்கிறது.

அந்த கெமிக்கல் ரியாக்சன் என்ன என்பது குறித்து, இன்றளவும் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். ஆனால், அதற்கான பதில் அவர்களுக்கு கிடைத்த பாடில்லை. அதற்கான பதில் கிடைத்தால், மனிதர்களும் பல ஆண்டுகள் நோய் இல்லாமல் வாழ முடியும்.. அந்த நாள் எப்போது……?

Recent Post

RELATED POST