நிலநடுக்கம் அல்லது பூகம்பம் என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்படும் போது தளத்தட்டுகள் நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிக்கும். நிலநடுக்கம் 3 ரிக்டருக்கும் குறைவாக இருந்தால் உணர்வது கடினமாகும். 7 ரிக்டருக்கு மேல் இருந்தால் அது பூமியில் பலத்த சேதம் மற்றும் சுனாமியை ஏற்படுத்தும்.
பூமியின் பல பகுதிகளிலும், புவி அதிர்ச்சிகள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கின்றன. எனினும் அந்த அதிர்ச்சி ஓரிடத்தில் மிகுதியானால், அதுவே நிலநடுக்கமாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் ஆழ்கடலுக்குள் நிகழும் போது சுனாமியாக மாறும்.
பொதுவாக ஒவ்வொரு வருடமும் 5,00,000 நிலநடுக்கங்கள் பூமியில் ஏற்படுகின்றன. ஆனால் இவற்றில் 1,00,000 நிலநடுக்கங்கள் மட்டுமே மக்களால் உணரப்படுகின்றன.
நமது பூமியின் லித்தோஸ்பெரிக் மேற்பரப்பு டெக்டோனிக் தட்டை உருவாக்குகிறது. இந்த டெக்டோனிக் தட்டுகள் ஒன்றையொன்று மோதிச் செல்கின்றன. தட்டுகளின் விளிம்புகள் மிகவும் கடுமையாக இருப்பதால், வேகமாக நகர்ந்து செல்லும் போது நிலநடுக்கம் ஏற்படுகிறது என ஆராய்ச்சியாளர் கூறகின்றனர்.