விமானத்தில் பறக்கும்போது காது அடைத்துக் கொள்வது ஏன்?

நடுகாதையும் தொண்டையையும் இணைப்பதாக யூஸ்டேசியன் குழாய் உள்ளது. இதனுடைய பணிகளில் ஒன்று செவிப்பறையின் இருபுறமும் அழுத்தம் ஒரே அளவில் இருக்கும்படி பார்த்துக் கொள்வதாகும். விமானம் உயர எழும்பும்போது அழுத்தம் விரைவாகக் குறைகிறது. அதனால் யூஸ்டேசியன் குழாயிலிருந்து காற்று வௌயேறுகிறது. விமானம் கீழே இறங்கும் போது அழுத்தம் அதிகமாகிறது. 

அப்போது இக்குழாய்க்குள் காற்று வேகமாக நுழைகிறது. இவ்வாறு விமானம் மேலெழும்பத் தொடங்கும்போதும் கிழிறங்கும்போதும் பஞ்சினால் காதை அடைத்தக் கொள்ளச் சொல்வது இவ்வாறு நேராமல் தடுப்பதற்குத்தான்.

சளி பிடித்திருக்கும் போது இக்குழாய்கள் அடைத்துக் கொண்டுவிடும். அப்போது அழுத்தத்தில் ஏற்படும் மாற்றத்துக்கு ஈடு கொடுக்க முடிவதில்லை. காற்று உள்ளே புக முடியாததால் நடுக்காதிலுள்ள அழுத்தமும் புற அழுத்தமும் ஒத்துப் போவது இல்லை. அதனால் உணர்வுமிக்க செவிப்பறை அழுத்தப்படுகிறது. அடைப்பட்டது போன்ற உணர்வும் சிறிது வலியும் உண்டாகும். சரியாக கேட்க முடியாது. 

வாயை மென்று கொண்டிருந்தாலோ கொட்டாவி விட்டாலோ, எதையாவது விழுங்கினாலோ யூஸ்டேசியன் குழாயில் ஏற்ப்பட்ட அடைப்பு சில சமயங்களில் நீக்கப்பட்டு காற்று உட்புக வழியேற்ப்படலாம். பல மாடிக்க கட்டடங்களில் லிஃப்டில் ஏறும் போது இறங்கும்போதும் கூட இவ்வாறு நேரலாம். காது, மூக்கு தொண்டை, கண் ஆகிய நான்கும் ஒன்றோடொன்று இணைந்து உள்ளவை. ஒன்றில் ஏற்படும் பாதிப்பு மற்றதையும்பாதிக்கலாம்.

Recent Post

RELATED POST