புரட்டாசி மாதத்தில் திருமணம் செய்யலாமா?

புரட்டாசி மாதத்தில் தான் முன்னோர்களுக்குரிய மகாளய பட்சம் அனுசரிக்கப்படுகிறது. நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதத்தில்தான் பெருமாளுக்கு விரதம் இருக்கப்படுகிறது. இது போன்ற காரணங்களால் திருமணம் உள்ளிட்ட போன்ற சுப காரியங்களை செய்வதில்லை.

புரட்டாசி மாதத்தில் வீடு கட்டலாமா?

புரட்டாசி மாதத்தில் தான் வாஸ்து பகவான் தூங்கிக் கொண்டிருப்பார். புரட்டாசி மாதத்தில் வாடகை வீடு சொந்த வீடு எந்த வீடாக இருந்தாலும், வீடு பால் காய்ச்சக் கூடாது என்று சொல்லப்படுகிறது. வீடு கட்ட உகந்த மாதங்கள் எதுவென்றால், சித்திரை வைகாசி ஐப்பசி கார்த்திகை, தை, மாசி ஆகியவை ஆகும் இந்த மாதங்களில் வீடு கட்டினால் வீடு கட்டும்போது எந்தவிதமான தடையும் வராது.

Also Read : இரண்டாம் திருமணம்: யாருக்கு வரம்? யாருக்கு சாபம்?

புரட்டாசி மாதத்தில் வளைகாப்பு செய்யலாமா?

புரட்டாசி மாதத்தில் வளைகாப்பு செய்தால் எந்தவித பாதிப்பும் இல்லை எனவே வளைகாப்பு நடத்தலாம். ஆனால், இந்த மாதத்தில் திருமணம், சாந்தி முகூர்த்தம் போன்றவற்றை நடத்துவது நல்லதல்ல. 

புரட்டாசி மாதத்தில் குழந்தைகளுக்கு மொட்டை அடிக்கலாமா?

புரட்டாசி மாதத்தில் குழந்தைகளுக்கு மொட்டை அடிக்க காது குத்த போன்ற விஷயங்களையும் செய்யலாம் ஆனால் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில் மட்டும் தான் செய்ய வேண்டும்.

Recent Post