நமது நாட்டில் உள்ள மக்கள் பல்வேறு நடைமுறைகளை பின்பற்றி வருகின்றனர். ஆனால், இவை எதற்காக பின்பற்றுகிறார்கள் என்று கேள்விக் கேட்டால் பலருக்கும் பதில் தெரியாது.
அவ்வாறு காரணம் தெரியாமல் பின்பற்றும் விஷயங்களில், செவ்வாய்கிழமை முடி வெட்டக்கூடாது என்பதும் ஒன்று. இதற்கான உண்மை காரணம் குறித்து தற்போது பார்க்கலாம்..
இன்றைய நூற்றாண்டில் நம் அனைவரும் ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை எடுத்துக்கொள்கிறோம்.
ஆனால், அந்த காலங்களில் அனைவரும் திங்கள் கிழமை தான் விடுமுறை எடுத்துக்கொள்வார்களாம். வாரம் முழுவதும் வேலைக்கு செல்லும் நபர்கள் திங்கள் கிழமையன்று வீட்டை சுத்தம் செய்வார்கள்.
இது ஒரு புறம் இருக்க, அந்த காலங்களில் சலூன் கடைகள் என்று தனியாக எதுவும் இருக்காது. வீட்டிற்கே வந்து முடி வெட்டுவார்கள்.
திங்கள் கிழமையன்று வீட்டை சுத்தம் செய்துவிட்டு, செவ்வாய்க் கிழமையன்று முடி வெட்டிக் கொள்வதால், வீட்டில் முடி சிதறி அசுத்தம் அடைய வாய்ப்பு இருக்கிறது. எனவே தான், செவ்வாய் கிழமை அன்று முடி வெட்டிக்கொள்வதை அந்த காலத்தில் தவிர்த்தனர். ஆனால், தற்போது வரை அந்த பழக்கம் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது.
ஏன் என்ற கேள்வி கேட்ட பிறகு தான் அறிவியல் இந்த அளவிற்கு வளர்ந்து இருக்கிறது. எனவே ஏன் என்ற கேள்வியை கேட்க மறக்காதீர்கள்..