பெண்கள் தினமும் மீன் சாப்பிட வேண்டும்..! ஏன் தெரியுமா..?

எந்தெந்த உணவுகளை சாப்பிட்டால், புற்றுநோய் வராமல் தடுக்க முடியும் என்பது குறித்து பார்க்கலாம்.

அதிக அளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தும் நோய்களில் ஒன்று, புற்றுநோய். ஒரு சில நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்தாலே, அதனை சரி செய்ய முடியும். ஆனால், இந்த புற்றுநோயை ஆரம்பத்திலே அறிந்தாலும், அதனை சரி செய்வது பெரும் சவாலாகவே உள்ளது. இந்த புற்றுநோய், பல்வேறு விதமான வகையில் மனிதனை தாக்கி, உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியது. சரி எந்தெந்த உணவுகளை சாப்பிட்டால், எந்தெந்த விதமான புற்றுநோயை தடுக்க முடியும் என்று தற்போது பார்க்கலாம்.

மார்பகம், மூளை, நுரையீரல், கணையம், வயிறு பகுதிகளில் ஏற்படும் புற்றுநோயை தடுப்பதற்கு, பூண்டை சாப்பிட வேண்டும். அதற்கு, புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் உள்ளது.

வாய், தொண்டை, வயிறு ஆகிய பகுதிகளில் ஏற்படும் புற்றுநோயை தடுப்பதற்கு, சிட்ரஸ் பழ வகைகளை சாப்பிட வேண்டும். அதாவது, எலுமிச்சை, புளூபெர்ரி ஆகியவற்றை சாப்பிடுவது சிறந்தது ஆகும்.

ரத்தத்தில் ஏற்படும் புற்றுநோயை தடுப்பதற்கு, வாரம் 4 முறை மீன் வகைகளை சாப்பிட வேண்டும் என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. குறிப்பாக பெண்கள் சாப்பிடுவதன் மூலம், கருப்பை வாய் புற்றுநோய் வருவது தவிர்க்கப்படும்.

வெங்காயத்தை தவறாமல் உணவில் சேர்ப்பதன் மூலம் 50 சதவீத புற்றுநோய் பாதிப்பில் இருந்து விடுபட்டுவிடலாம். ஆப்பிளுக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை இருக்கிறது.

அவகோடா, முளைகட்டிய தானியங்கள், முட்டைக்கோஸ், தக்காளி, கேரட், செர்ரி பழம், மக்காச்சோளம், பேரீச்சம்பழம், முட்டை, இஞ்சி, திராட்சை, காளான், பட்டாணி, மாதுளை போன்றவற்றை சாப்பிட்டு வருவதும் புற்றுநோயை தடுக்க உதவும்.

இந்த உணவுகளை முறையாக சாப்பிட்டு வந்தாலே, புற்றுநோயை தடுப்பது மட்டுமின்றி, பிற உடல்நலக்கோளாறுகளையும் தடுக்க முடியும்.

Recent Post

RELATED POST