யோக முத்ரா ஆசனம் செய்யும் முறை

பத்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, முதுகுப்பக்கம் கைகளை கட்டிக்கொண்டு இடது கையின் மணிக்கட்டில் வலது கையால் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும். பூமியை தொடும்படி நெற்றியையும் கையும் அமைத்து சில நாட்களில் இந்த ஆசனத்தை பழக்கத்திற்கு கொண்டு வரலாம்.

குனியும் போது மெதுவாக மூச்சை வெளியேற்ற வேண்டும். சுமார் 15 வினாடிகள் இருந்த பிறகு மூச்சை உள்ளுக்கு இழுத்தவாறு மெல்ல நிமிர வேண்டும். பத்மாசனத்தில் நன்றாக அறிந்த பிறகே யோகமுத்ரா சுலபமாக அமையும்.

தொந்தி வயிறு உள்ளவர்களுக்கு இந்த ஆசனம் கடினமாக இருக்கும். பத்மாசனம் செய்ய முடியாதவர்கள் சாதாரணமாக அமர்ந்து கொண்டு செய்யலாம்.

யோகமுத்ராவின் பலன்கள்

வயிற்றிலுள்ள ஜீரண உறுப்புகள் பலம் அடைகிறது. தாது இழப்பு, பலம் குறைவு, நீரிழிவு நோய்கள், அஜீரணம், மலச்சிக்கல், நுரையீரல் கிருமிகள் ஒழியும்.

சர்க்கரைவியாதி, வயிற்றுப்புண், குடல் இறக்கம், விரைவீக்கம் போன்ற நோய்கள் பூரண குணமடையும்.

இடுப்பு மற்றும் வயிற்றுப் பாகமும் அழகான அமைப்பை பெற இந்த ஆசனம் உதவுகிறது.

Recent Post

RELATED POST