தூக்கம் என்பது மனித வாழ்வில் மிக மிக முக்கியமானது. நோயெதிர்ப்பு மண்டலம் முதல் மனஅழுத்தம் வரை அனைத்து பிரச்சனைகளுக்கு தூக்கமின்மை தான் காரணம். ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் கிடைக்க நித்திரை யோகா உதவுகிறது. நித்திரை யோகாவை செய்யும் போதும், உங்களது மனது அமைதியான நிலைக்கு சென்று ஆழ்ந்த கொண்டு வருகிறது.
படத்தில் உள்ள படி விரிப்பில் படுத்துக்கொண்டு காலின் சிறு விரல்கள், உள்ளங்கால்கள், குதிகால்கள், இடுப்பு, அடிவயிறு, மேல் வயிறு, மார்பக கழுத்து என காலிலிருந்து தலை வரை உடலின் ஒவ்வொரு பகுதியாக மனதால் நினைக்கவும். இதே போல் இரண்டு அல்லது மூன்று முறை செய்ய வேண்டும். இப்படி செய்வது ஆரம்பத்தில் கடினமாக இருக்கும்.
இந்த ஆசனம் மனதை ஒரு நிலைப்படுத்த உதவும். புத்தி மந்தம் நீங்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை மற்றும் பலவிதமான மன நோய்கள் நீங்கும்.
நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடு அதிகரிக்கும். நீரிழிவு நோயின் அறிகுறிகளை போக்குவதோடு, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.