லெஜன்ட் சரவணன் படத்தில் இணைந்த யோகிபாபு

தொழிலதிபர் லெஜன்ட் சரவணன், தமிழ் திரையுலகில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார். அவர் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்துலா நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் கதாபாத்திரத்தில் நடிக்க நகைச்சுவை நடிகர் யோகிபாபு ஒப்பந்தமாகி உள்ளார். அதன் பிறகு யோகிபாபுவுக்கு படக்குழுவினர் கேக் வெட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இப்படத்தில் நடித்து வந்த நடிகர் விவேக் கடந்த சில மாதங்களுக்கு முன் மரணமடைந்ததால், அவருக்கு பதில் யோகி பாபு நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

Advertisement