இரு மடங்கு பலனை தரும் இரட்டை ஆஞ்சநேயர் வழிபாடு..எங்கு உள்ளது தெரியுமா?

மயிலாடுதுறையில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது மேலபதி கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற இரட்டை ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. செம்பனார் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள இக்கோயில் இப்பகுதியில் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலமாகும்.

இங்குள்ள இரட்டை ஆஞ்சநேயர்களுக்கு வெண்ணெய் காப்பு சாற்றி வழிபட்டால், வெண்ணெய் உருகுவது போல ஆஞ்சநேயரும் நமது வேண்டுதலுக்கு மனம் இறங்குவார். நம்முடைய துன்பங்களும் வெண்ணெய் போல் உருகி ஓடி விடும் என்பது நம்பிக்கை.

இத்தலத்தில் ஆஞ்சநேயரை வழிபட்டால் சனி பகவானால் ஏற்படும் தோஷம் குறையும். இந்த ஆஞ்சநேயரை வழிபட ஆரம்பித்தால் உங்கள் காரியம் வெற்றியடையும் என்பது நம்பிக்கை.

இங்குள்ள இரட்டை ஆஞ்சநேயரை வழிபட்டு வந்தால் நவகிரக தோஷங்கள் எதுவானாலும் விலகி விடும். அமாவாசை நாட்களில் இந்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

சிறப்பு அபிஷேகம், துளசி மாலைகள், வடை மாலைகள் மற்றும் வெற்றிலை மாலைகள் அணிவித்து பக்தர்கள் வழிபடுகின்றனர்.

Recent Post