பனங்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

பனை மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய பனங்கிழங்கு, பதநீர், நுங்கு, பனம்பழம், பனை ஓலை, நார் என அனைத்திலும் மருத்துவ குணம் கொண்டது. இது மனிதர்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்கிறது.

பனைமரம் அதிக காலம் உயிர் வாழும். இதனை கற்பக விருட்சம் என்று அழைக்கப்படுகிறது.

பனங்கிழங்கின் பல மருத்துவ குணங்கள் உள்ளது. இது உடலுக்கு குளிர்ச்சி தரும். மலச்சிக்கலை தீர்க்கும். உடலுக்கு வலுசேர்க்கும்.

பனங்கிழங்கை நன்றாக வேக வைத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி காய வைத்து அதோடு கருப்பட்டி சேர்த்து பொடி செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும். இதனுடன் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டால் உடல் உறுப்புகள் பலம் பெறும்.

மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் பனங்கிழங்கை நன்றாக வேகவைத்து அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு சாப்பிட்டால் உடனடியாக தீர்வு கிடைக்கும்.

சிறுநீர் பாதிப்பு பிரச்சனை உள்ளவர்கள் பனங்கிழங்கு மாவை உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வேகவைக்காத பனங்கிழங்கை வெயிலில் காய வைத்து அரைத்து மாவாக்கி வைத்துக் கொள்ளவும். அதனை தோசை அல்லது உப்புமா செய்தோ சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பனங்கிழங்கு வாயுத்தொல்லை தரக்கூடியது. இதனை தவிர்க்க பணம் கிழங்குடன் பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து சாப்பிடலாம்.

பனங்கிழங்கில் சிறிதளவு பித்தம் இருப்பதால் இதனை சாப்பிட்ட பிறகு 5 மிளகு எடுத்து சாப்பிடுங்கள்.

Recent Post

RELATED POST