உடலில் கொழுப்பு அதிகரித்தால், இதயம் தொடர்பான நோய்கள், நீரிழிவு மற்றும் பிற நோய்களுக்கும் இது வழிவகுக்கிறது. உணவில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தலாம்.
தினமும் 30 கிராம் ஆளி விதையை சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருக்கும். மேலும் இவை தமனிகளின் வீக்கத்தையும் குறைக்கின்றன.
க்ரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. தினமும் ஒரு கப் க்ரீன் டீ பருக வேண்டும். இது அதிக கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது.
ஓட்ஸ், ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, பட்டாணி, தானியங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் இது அதிக கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.
இரவில் கொத்தமல்லி விதைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து இரவு முழுவதும் ஆற வைக்கவும். மறுநாள் காலையில் அந்த தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும். இவ்வாறு செய்வதால் உடலில் உள்ள அதிக கொலஸ்ட்ரால் குறைந்து, நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கும்.
இரவில் தூங்கும் முன் ஒரு டம்ளர் பாலில் மஞ்சள் சேர்த்து குடிக்கலாம். காய்கறிகளை சமைக்கும்போது மஞ்சளை தினமும் உபயோகித்து வந்தால் கொலஸ்ட்ராலை அளவை குறைக்கலாம்.