வெள்ளையான பற்கள் வேண்டுமா? வாழைப்பழ தோல் போதுமே..!

ஒருவரின் புன்னகையை அழகுபடுத்தி காட்டுவது அவருடைய பற்கள்தான். அந்த பற்களை வெள்ளையாக வைத்துக்கொள்ளவேண்டியது அவசியம். இதற்காக விலையுயர்ந்த சிகிச்சைகளுக்கு செல்லாமல் வீட்டு உணவு பொருட்கள் மூலம் அதனை சரி செய்யலாம்.

வாழைப்பழம்

வாழைப்பழங்கள் ஒரு ஆரோக்கியமான பழமாக கருதப்படுகின்றன, அவை ஏராளமான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளன. ஆனால் வாழைப்பழத் தோல்கள் பற்களை வெண்மையாக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? தினமும் உங்கள் பற்களில் மீது வாழைப்பழ தோலை வைத்து ஒரு நிமிடம் தேய்க்கவும். வாழைப்பழ தோலில் உள்ள பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உங்களுடைய பற்களை வெண்மையாக்கும்.

ஸ்ட்ராபெரி

ஸ்ட்ராபெரி பழங்களில் பல மருத்துவ நன்மைகள் அடங்கியுள்ளது. இது பற்களை வெண்மையாக்கும். ஒன்று அல்லது இரண்டு ஸ்ட்ராபெர்ரிகளை எடுத்து, அவற்றை பிசைந்து, 2 முதல் 3 நிமிடங்கள் வரை உங்கள் பற்களில் தடவவும். சிறிது நேரம் கழித்து பல் துலக்கலாம்.

ஸ்ட்ராபெர்ரி பழத்தில் உள்ள மாலிக் அமிலம் உங்களுடைய பற்களை வெள்ளையாக்கும். அதே நேரத்தில் ஸ்ட்ராபெர்ரிகளில் காணப்படும் நார்ச்சத்து இயற்கையான சுத்தப்படுத்தியாக செயல்படுகிறது, இது குறிப்பாக வாய் மற்றும் பற்களிலிருந்து பாக்டீரியாவை அகற்ற உதவுகிறது.

புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு பற்கள் மஞ்சள் நிறமாக மாறும். மேலும் புகைப்பிடிப்பதால் உடலுக்கு பல வகையான தீங்கு ஏற்படும். புகைப்பழக்கத்தால் எந்த விதத்திலும் நன்மை கிடையாது. எனவே அவற்றை விட்டுவிடுங்கள்.

Recent Post

RELATED POST